மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற
வன்முறைகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பெண்களுக்கு எதிராக பரப்பப்படுகின்ற
அவதூறுகள் மற்றும் பெண்களின் தனித்துவத்தைப்
பாதுகாத்தல் தொடர்பில் பெண் பொலீஸ் உத்தியோதர்களுக்கு தெளிவுபடுத்தும் ஒருநாள் செயல் அமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
சமத்துவம்
மற்றும் நீதிக்கான நிலையத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14
பிரதேச செயலக பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவில்
கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களில்
தெரிவு செய்யப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சமாதானமும்
சமூக பணி அமைப்பின் தேசிய நிதி முகாமையாளர் எம்.டி.விக்ரர் தலைமையில்
நடைபெற்ற செயல் அமர்வில், சமாதானமும் சமூக பணி அமைப்பின் தேசிய பணிப்பாளர்
டி.தயாபரன் ,
வளவாளரான செல்வி அனா ஜெயராஜ், மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் ஏ.எல். இசாதீன் உட்பட சமாதானமும் சமூக
பணி அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.