தைத்திருநாள் சிறப்பு வழிபாடுகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் வியாபார நிலையங்களிலும், வீடுகளிலும் மக்கள் பொங்கலிட்டு, சூரிய பகவானிற்கு நன்றி செலுத்தியமையை அவதானிக்க முடிந்தது.