பல்கலைக்கழக மாணவியை குத்தி கொன்ற மாணவனுக்கு விளக்க மறியல் .

 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர்,  செவ்வாய்க்கிழமை (17)  நண்பகல், அவருடைய காதலன் என்று கூறப்படும் நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

கொழும்பு - 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் குறுந்துவத்த பொலிஸாரினால் சடலம்,  கண்டெடுக்கப்பட்டது.   உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.  

உயிரிழந்த மாணவியின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.  கொலை செய்தாகக் கூறப்படும் சந்தேகநபரும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஆவார். அவர், கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இடம்பெற்ற பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.   காதலன் என கூறப்படும் நபர், மூன்று மணிநேரத்துக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 24 வயதான சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.