நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வுக் காண முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதனைவிடுத்து நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடுவது பொறுத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நாளை(23) முதல் நாடுமுழுவதிலும்
மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில்
ஊடகவியலாளர்கள் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.