நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு முட்டை விற்க முடியாது, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

 


முட்டைக்கான உச்ச விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்லவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் ஆக குறைந்த சில்லறை விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற முட்டை ஒன்றின் ஆகக் குறைந்த சில்லறை விலை 46 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த விலைக்கு முட்டையை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.