தேவையான அளவு நிதி கிடைக்காவின் தேர்தலை நடத்த முடியாது.

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளுக்குத் தேவையான நிதியைக் கேட்டு நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று அல்லது நாளை கடிதமொன்றை அனுப்புவேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தற்போது கிடைத்திருக்கும் நிதியில் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேவையான அளவு நிதி கிடைக்காவின் தேர்தலை நடத்த முடியாது என்று ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுக்காக 2 கோடி 50 இலட்சம் ரூபாய், நிதியமைச்சில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்தமாதம் கிடைத்தது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ​தேவையான அடிப்படை வேலைகளை மேற்கொள்வதற்கான விலைமனு கோரல் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பது இயலாமையாகும் என நிதியமைச்சின் செயலாளர், உயர்நீதிமன்றத்துக்கு கடந்தவாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.