கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ,ரி.எம். இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்றில் வந்த முகமூடி அணிந்த நான்கு பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.