சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவின் அங்காரத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் போன்ற கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்க பட்டுள்ளன.
கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரி தலைமை இயக்குனர் எ கே . முருககுமார் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மணடபத்தில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் அதிதிகளாக முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி .முரளிதரன் , மாவட்ட மனித வள உத்தியோகத்தர்களான மைக்கல் கொலின் , தெய் வேந்திர குமாரி , ஓய்வுநிலை ஆசிரியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர் .
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்கை நெறியினை பூர்த்தி செய்த 107 ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது .