உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் - காவல்துறை மா அதிபர்

 


பாடசாலைகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.

உறுதிப்படுத்திய தகவல்களைப் பெறாமல் பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.