தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து, சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம்.

 


கம்பளை குருந்துவத்தையில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியதுடன் இருவர் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தேயிலைத் தொழிற்சாலையின் உரிமையாளரின் மகனும் தொழிலாளி ஒருவருமே தீ காயங்களுடன்  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேயிலை தொழிற்சாலை தீப்பற்றி எரிவதாக குருந்துவத்தை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் கண்டி தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தீ விபத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.