தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (09) நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அனைத்து கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.