அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை விவசாயம் செய்யும் நெல் விவசாயிகளுக்கு டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

 


சீனாவினால் இலவசமாக வழங்கப்பட்ட டீசலை விநியோகிப்பதற்கு 12.2 கோடி ரூபாய் வரை அரசாங்கத்துக்கு செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நெல் அறுவடைக்காக சீனாவினால் வழங்கப்பட்ட 6.8 மில்லியன் லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணியை விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

டீசலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக அரசாங்கத்தினால் 12.2 கோடி ரூபாய் செலவாகும் என்றார்.

அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை விவசாயம் செய்யும் நெல் விவசாயிகளுக்கு டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டரை ஏக்கர் அல்லது ஒரு1 ஹெக்டேயரில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு 15 லீற்றர் எரிபொருள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாய அமைச்சின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தேவையான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.