பிரித்தானிய பிரஜையை பண மோசடி செய்து ஏமாற்றியது தொடர்பில் ஒருவர் கைது.

 


பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு அளுத்கமவில் வீடொன்றை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரஜை செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சந்தேக நபர், வீட்டைக் காட்டி, வீட்டைக் கொடுக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.