தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பேரினவாதத்துடனேயே இணைந்து செயற்படும் என்பதனால் அவர்களுடன் எந்த கூட்டும் சேரமுடியாது- கோவிந்தன் கருணாகரம்

 


2004ஆம் ஆண்டு ஆனந்த சங்கரி ஐயாவுக்கும் ஏனையவர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கட்சியையும் சின்னத்தையும் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

18வருடங்களுக்கு பின்னர் தமிழரசு;கட்சி சின்னதையும்
தூக்கிச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பேரினவாதத்துடனேயே இணைந்து செயற்படும் என்பதனால் அவர்களுடன் எந்த கூட்டும் சேரமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம்,தமிழீழ விடுதலை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கந்தராஜா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்