சின்னம் சூட்டலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

















 காத்தான்குடி மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டுகின்ற நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது

கல்லூரியின் பிரதி அதிபர் AB. அஸ்மீர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 அத்துடன் கல்லூரியின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், சுகாதாரக் குழு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது