சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வது தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு!!

 
 









கனடா ஐ தமிழ் பவுண்டேசனினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு தைப் பொங்கலுக்குரிய பொருட்கள், மற்றும் புத்தாடைகள் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வும் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.01.2023) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் அவ்வமைபின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.விஸ்வராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டதுடன் பயனாளிகளுக்கான பொங்கலுக்குரிய பொருட்கள் மற்றும் புத்தாடைகள் என்பவற்றை வழங்கி வைத்துள்ளார்.