தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி கடலுக்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர் .

 


மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் பாதாள நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவர்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கடலுக்கு குளிக்க வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.