இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கான முன்னோடி நடவடிக்கையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுமாறு இலங்கை விடுத்த வேண்டுகோள்களிற்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களிற்கு இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் நடவடிக்கை கடன்களை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்சிம் வங்கி இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் நீண்டகால அர்ப்பணிப்புகள் குறித்து இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனாவின் எக்சிம் வங்கி ரணில்விக்கிரமசிங்கவிற்கான தனது கடிதத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணயநிதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடரவேண்டும் என சீனாவின் எக்சிம் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.