அச்சுவேலி, பாரதி வீதி பகுதியில், மது போதையில் வீட்டுக்கு வந்த குடும்பஸ்தர், மனைவியுடன் சண்டையிட்ட பின்னர் மனைவி, பிள்ளைகளை துரத்தி விட்டு, வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்ட வீட்டுக்குத் தீ வைத்துள்ளார்.
வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள், தண்ணீர் ஊற்றி தீனை கட்டுப்படுத்த முயன்றபோதிலும் தீ கட்டுக்கடங்காமல் வீட்டின் முகடு வரை பற்றி எரிந்து நாசமாக்கி உள்ளது.
வீட்டுக்கு தீ வைத்த சந்தேக நபரான வீட்டின் குடும்பஸ்தரை, கைது செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத மூன்று பெண் பிள்ளைகள்
வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், தந்தையே இந்த ஈனக் காரியத்தை
புரிந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.