பாகிஸ்தானில் உணவு பஞ்சம் .

 


 

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

 இந்நிலையில், சிந்து மாகாண அரசு மானிய விலையில் மாவு விற்பனையை மேற்கொண்டுள்ளது. மிர்புர்காஸ் மாவட்டத்தில், நேற்று முன்தினம் தலா 10 கிலோ எடையுள்ள மாவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ மாவு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 வயது தொழிலாளி ஹர்சிங் கோல்ஹி என்பவர் உயிரிழந்தார். இவருக்கு, 7 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளின் பசியைப் போக்க உணவுக்காக போராடி தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் முக்கிய நகரான காரச்சியில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.160 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.