க.பொ.த (உயர்தரப்) பரீட்சை இன்று (23) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மண்முனை மேற்கு, கல்குடா மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களில் பொலிசார் பாதுகாப்பு வழங்க, அமைதியான முறையில் இன்று ஆரம்பமானது.
இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வருகை தந்த கல்லடி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் தமக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுப் பரீட்சை எழுதச் சென்றமை குறிப்பிடத்தக்கது.