மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான சிமாட் செகரடியட் இணையத்தளம் அரசாங்க அதிபர் கருணாகரனால் ஆரம்பித்து வைப்பு.

 






 

 

 


மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செலயத்திற்கான நவீன் இணைத்தளம் “Smart Secretariat” அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்விணையத்தளத்தினூடாக மாவட்ட செயலகத்தில் பயன்படுத்தக்கூடிய கணனி முறைமைகள் அனைத்தும் ஒரே இணையப்பக்கத்தில் அலவலக உத்தியோகத்தர்களால் பயன்படுத்தக்கூடியவாறு உள்ளடக்கப் பட்டிருக்கின்றது.
அத்துடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவினால் புதிதாக உருவாக்கப்பட்ட “Inventory Management System” மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தரின் வழிகாட்டலின்கீழ் விவசாயப்பிரிவு உத்தியோகத்தர் துவாரகன் என்பவரால் உருவாக்கப்பட்ட “Hall Booking System” என்பனவும்ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதமகணக்காளர் திருமதி இந்திராமோகன், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி. லக்சிகாக தீசன், கணக்காளர் எம். வினோத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.