உள்ளூராட்சி மன்ற சபைகள் தேர்தல் 2023 ஆண்டுக்கான வேற்பு மனு
கட்டுப்பணத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினர் இன்று
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர் .
தமிழ்
மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான
சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலையிலான கட்சி உறுப்பினர்கள் கட்டுப்பணத்தினை
செலுத்தியுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையினை தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியதை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இ இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்