மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொங்கலுக்கான ஆயத்தங்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று மட்டக்களப்பில் உள்ள வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, ஆரையம்பதி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய சந்தைகளில் மக்கள் ஆர்வத்துடன் புத்தாடை கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் மட்பாண்டங்கள் விற்பனையுடன் பொங்கல் தயார் நிலை பெறுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் அதிக ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், வீடுகளை துப்புரவு செய்து வீட்டு உபகரணங்களை சீர்ப்படுத்துவதில் மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை வரவேற்கும்முகமாக கரும்புகளுடனும் இனிப்புகளுடனும் பொங்கல் பண்டிகையை வரவேற்க மக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.