13ஆம் அரசியல் அமைப்பின் படி, காவல்துறை அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் தொடர்பான விடயங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் உறுதி மொழி வழங்கியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி தமக்கு இந்த விடயத்தை அறிவித்தாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
அத்துடன், காணி விடுப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி உறுதி மொழி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்