மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுந்த எதிர்ப்பு அலை மற்றும் ஊடகங்கள் மூலம் கிடைத்த ஆதரவினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஊடகங்களில் வெளியான ஆதரவை பாராட்டுவதாக தெரிவித்த அவர், மின் கட்டணத்தை உயர்த்தும் யோசனையை நிறுத்தினால், ஊடகங்களுக்கும் மரியாதை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை புத்தாண்டு பிறந்த கையுடன் மின்கட்டணம் அதிகரிக்கப்படுமென அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து.