இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படும்.
நீண்டகாலமாக வணிகர் கழகம் இக்காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்தியா, சிறிலங்கா அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர்.
கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனத்தினர் எதிர்வரும் சனிக்கிழமை 07ம் திகதி வணிகர்கழகத்திற்கு வருகை தரவுள்ளனர்.
இதுவரையில் இந்தியாவில் இருந்து கெழும்பு ஊடக பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண வர்தகர்கள் தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.