கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி .

 


இந்த வருடம் முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கொடுப்பனவை 45 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்தம்  20 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில்  நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த கொடுப்பனவு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாயாக கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.