பிபில நகரில் பாதணி விற்பனை செய்யும் கடையொன்றில் பழைய விலைகளை மறைத்து அதிக விலை ஸ்டிக்கர் ஒட்டி பாதணிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவர் நுகர்வோர் அதிகாரசபையின் மொனராகலை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது இவ்வாறு விலை மறைக்கப்பட்ட சுமார் எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியான முப்பது ஜோடி பாதணிகளை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளருக்கு எதிராக பிபில நீதவான் நீதிமன்றில் வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.