ஓமான், மஸ்கட் நகரில் இலங்கை தூதுவராலயத்தினால் இணைந்ததாக நிர்வகிக்கப்பட்ட ‘பாதுகாப்பு வீட்டில்’ தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் எழுவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (08) அதிகாலை, வந்தடைந்தனர்.
அந்த பாதுகாப்பு வீட்டில் 118 பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பெண்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அனைவரும் மஸ்கட் விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். எனினும், அதில் நான்கு பணிப்பெண்களுக்கான ஆவணங்களில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் காரணமாக, ஓமான் விமான நிறுவனம் அந்த நால்வரையும் பொறுப்பேற்க மறுத்துவிட்டது.
எனினும், ஏனைய ஏழு பெண்களும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், தற்காலிக விசாவிலேயே ஓமானுக்கு ஏமாற்றி அனுப்பிவைத்துள்ளன என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.