மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஹைராத் நகரில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (02.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி வீட்டிலிருந்து வைபவத்துக்காக சென்று நேற்றுமுன் தினம் (01.01.2023) வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் நேற்று (02.01.2023) சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு எரிவாயு சிலிண்டர்களும், ஒரு மடிக்கணணி மற்றும் கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.