இந்துமாமன்றம் முன்னெடுக்கும் பொங்கல் நிவாரணப்பணி .

 


அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் நோர்வேநாட்டில் வாழும் ஒருநலன் விரும்பியின் நிதிபங்களிப்புடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் முன்னெடுத்த பொங்கல் நிவாரணப்பணி நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான பொங்கலுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் பொருளாதார நிலைகாரணமாக பல அன்றாட தொழிலாளர்களும் வருமானம் குறைந்த குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பொங்கலை கொண்டாடுவதற்கு கூட சில குடும்பங்கள் தவித்துவரும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் இந்த முயற்சியை மேற்கொண்டு உலர் உணவுப் பொதியினையும் வழங்கி வைத்துள்ளது.

மன்றத்தின் தலைவரும் சமாதான நீதவானுமாகிய சந்திரசேகரம் தலைமையில் இந்துமாமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற உலர் உணவுப ;பொதி வழங்கும் நிகழ்வில் மன்றத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு பொதியினை வழங்கி வைத்தனர்.

இந்துமாமன்றம் இது போன்ற பல சமூகப்பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.