மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


 மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரையின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமாரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள கிரம சேயையாளர் பிரிவுகளில் டெங்கு நுளம்புக்கான புகைவிசுறும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாமாங்கம் கிரம சேவையாளர் பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மாமாங்கம் கிரம சேவையாளர் பிரிவில் புகை விசுறும் நடவடிக்கைகள் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கிரிசாந்தராஜா தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தெளிக்கருவி இயக்கவியாளர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.