க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்சார பாவனையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மின்சார பாவனையாளர்களிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு மின்வெட்டுகளைத் தவிர்ப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. (a)