நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் .

 


நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீற்றராக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.