மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுத்
திறனாளிகளுக்கான வாழ்வதார ஊக்குவிப்பு செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கமிட்
நிறுவனத்துடன் இணைந்து வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடும் 127 மாற்றுத்
திறனாளிகள் குடும்பங்களிற்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்
பொதிகள் வழங்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட அமுலாக்க
அலுவலகத்தின் நிதியனுசரணையில், களுவாஞ்சிக்குடி உதவிப் பிரதேச செயலாளர்
சத்தியகௌரி தரனிதரன் தலைமையில், மட்டக்களப்பு ஒந்தாட்சிமட சமூகப்
பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே, உலர் உணவுப் பொருட்கள்
வழங்கப்பட்டன.
வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் பதில் பொதுச் செயலாளர்
எஸ்.பற்றிக், வை.எம்.சி.ஏயின் ஆலோசகர்களான வி.டி.செகராஜகசிங்கம், எல்.ஆர்
டேவிட் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.