பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது.
இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும்,இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான வெற்றி எழுச்சிக்கான தனித்துவமான ஆண்டாகவும் 2022 ஆம் ஆண்டை குறிப்பிட முடியும்.இந்த உன்னத எழுச்சிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம் எதிர்க்கட்சித் தலைவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.