தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பாரம்பரிய விவசாய முறைமைகளை சித்தரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இன்று (19) இடம் பெற்ற பொங்கல் விழாவில் அலுவலர்கள் பிரதேச செயலகத்தில் இருந்து மாட்டு வண்டி ஊடாக வயல் நிலப்பகுதியை நோக்கிச் சென்றதுடன் பாரம்பரிய நெல் அறுவடை, விவசாய செய்கையின் முக்கியத்துவத்தினை பறைசாற்றும் பல பாரம்பரிய அம்சங்களையும் வெளிக்கொணர்ந்தனர்.
இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட பூஜையும் இடம் பெற்றது. பூஜையினை சுவாமி மலை பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் மோகன சர்மா நடாத்தினர்.
குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.