மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு முதியோர்களின் ஒன்றுகூடல் மற்றும் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இருதயபுர மேற்கு முதியோர் சங்க தலைவர் பி.கிருஸ்ணபிள்ளை தலைமையில் இடம் பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஷியாஹுல் ஹக்
மற்றும் விசேட அதிதியாக வைத்திய கலாநிதி எஸ். கருணாகரன் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 60 வயதுக்கு மேற்பட்ட 60 முதியோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்வமைப்பின் முதியோர்கள் இணைந்து, தமது திறமையை வெளிக்காட்டும் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.
முதியோர்களுக்கு கெளரவம் செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டியது இளையோரின் கடமை என இதன் போது அதிதிகள் குறிப்பிட்டனர்.
இருதயபுரம் மேற்கு முதியோர் சங்கமானது மிகவும் சிறப்பான முறையில் இயங்குவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந் நிகழ்வில் இச்சங்கத்தின் செயலாளர் என். ஜெகநாதன் மற்றும் பொருளாலர் எஸ். டானியல் குணநாதன், இறுதயபுர கிராமசேவை உத்தியோகத்தர் சுகந்தி ஜெகதர்ஷன், சமூக சேவை உத்தியோகத்தர் பி. ராஜ்மோகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயதர்சன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.