தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 


தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையம் சக்தி சுவிஸ் சுரேஸ் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் வினோராஜ் தலைமையில் வந்தாறுமூலை பெரியதம்பிரான் ஆலயத்தில் வைத்து சமய வழிபாட்டு நிகழ்வுகளுடன் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கலை கலாச்சார நிகழ்வுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மாவிற்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.அகத்தியர் அறநெறி பாடசாலை மாணவர்களின் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் அதிதிகள் கௌரவிக்கப்பட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்மா பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புலம்பெயர் நாடான குயின்ஸ்லான்ட் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சக்தி திரு மாசிலாமணி ரவி மற்றும் சுவிஸ் தா.ஜெயக்குமார் ஆகியோர்கள் இதற்கான நிதி அனுசரனையினை வழங்கியிருந்தார்கள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பொங்கல் தினத்தினை கொண்டாடுவதில் வறிய மக்கள் பலர் பெரும் கஸ்ர நிலையினை எதிர்நோக்கி வருகின்றனர்.இவ்வாறான நிலமைகளை கவனத்தில் கொண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் அதிதிகளாக கிராம சேவகர் எஸ்.மோகனரூபன் பதிவாளர் திருமதி பஞ்சாட்சரம் ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான நீதவானுமான எஸ்.சண்முகம் ஆயுள்வேத வைத்தியர் திருமதி நிரஞ்சனா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.