NVQ - பரீட்சையில் சித்தியடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!!









NVQ - பரீட்சையில் சித்தியடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள தலைமை காரியாலயத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில்(05) திகதி இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நடாத்தபட்ட தேசிய தொழில் திறன் தகைமை (NVQ) பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நால்வர் சித்தியடைந்துள்ளனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இலங்கை தொழில்நுட்ப பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் A+தர உத்தியோகத்தர்களாக கடமையாற்றி கொண்டிருக்கும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நான்காம் மட்ட தேசிய தொழில் திறன் தகைமை (NVQ Level 04) பரீட்சையை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அண்மையில் நடாத்தி இருந்தது.
இப்பரீட்சையில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான டி.சுரேஸ், இ.கிருபாகரன், ஆர்.லோகேஸ்வரன், எஸ்.தங்கவேல் ஆகியோர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி வங்கிகளின் நிகழ்நிலை (Online) கணனி செயற்பாடுகள், வாடிக்கையாளர் உறவுமுறை முகாமைத்துவம் (CRM), ஆளணி முகாமைத்துவ (HRM) வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதுடன் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிகழ்வில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் வி.கனகசிங்கம், பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மக்பூல், மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எஸ்.எம்.பஸீர், சிரேஷ்ட சமூர்த்தி முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.