ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் #PlasticLessSrilanka போயா தின கடற்கரை சிரமதான செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

 

 










 ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் #PlasticLessSrilanka போயா தின கடற்கரை சிரமதான செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் சவுக்கடி வள்ளுவர் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் சவுக்கடி கடற்கரையில் சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி சிரமதானமானது #PlasticLessSrilanka எனும் தொனிப்பொருளில் போயா விடுமுறை தினத்தை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பயனுறுதி மிக்க தினமாக மாற்றுவதற்கான ஆரம்பமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் போயா தினங்களில் வெவ்வேறு கடற்கரை பிரதேசங்களில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சம்மேளனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் வி.வினோஜ் அவர்கள் தெரிவித்தார்.

இதன் போது சம்மேளனத்தின் நிர்வாகிகள் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமதான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.