ஓட்டமாவடி தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கு Y2K அமைப்பினால் வெற்றிக் கிண்ணம் அன்பளிப்பு!!

 

 
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 107 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினர் கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர்.
அந்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 2000 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர மாணவர் (Y2K) அமைப்பினர் இந்த வெற்றிக் கிண்ணத்தை பாடசாலைக்கு வழங்கியுள்ளனர்.
ஒன்பது கிலோ கிராம் நிறை கொண்ட இக் கிண்ணத்தை சர்வதேச போட்டிகளுக்கு கிண்ணங்களை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
ஓ கா சிக்கன் நிறுவனத்தின் முகாமையாளரும் (Y2K) பழைய மாணவர் அமைப்பின் செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் தினேஸ் குமார குறித்த கிண்ணத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக்கிடம் (Y2K) பழைய மாணவர் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.நளீர், செயலாளர் எம்.எச்.எம்.பாஹிர், கிரிக்கெட் தலைவர் ஏ.எஸ்.எம்.பர்ஹான் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் உத்தியோகாபூர்வமாக கிண்ணத்தை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.