04 பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 


நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம்  ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.