தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திறைசேரி 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

 


 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திறைசேரி 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிட்ட அவர்,  மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதை உறுதிசெய்ய ஆணைக்குழுவும் தேர்தல்கள் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் தத்தமது பணியிடங்களில் தங்களின் தபால் வாக்குகளை  பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பதிவு செய்யமுடியும் என்றும் குறிப்பிட்டார்.