உலக இரும்பரசன் எனப் போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனன தின அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

 


 

உலக இரும்பரசன் எனப் போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனன தின அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
நொச்சிமுனையில் உள்ள அவரது உருவச்சிலையில் இன்று காலை ஜனன தின நிகழ்வு நடைபெற்றது.
சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் போதனாசிரியருமான திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஜனன தின நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர்
பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் இலங்கையில் மட்டுமன்றி இந்தியா மற்றும் உலகநாடுகள் பலவற்றில் சாண்டோ கலையின் மூலம் பல்வேறு வீர தீர செயற்பாடுகளை முன்னெத்துவந்தார்.
இதன் காரணமாக பிரித்தானிய இளவரசியினால் இரும்பு மனிதர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது அது அவருக்கான சர்வதேச அங்கீகாரத்தில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஜனன தின அஞ்சலி நிகழ்வில் அவரது வழித்தோன்றல்களாக சாண்டோ கலையினை தொடர்ந்தவர்கள்,தொடர்ந்து வருபவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்