ஆணி வேர் நிறுவனத்தின் உற்பத்திகள் முழுக்க முழுக்க பாரம்பரிய உணவுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது சிறு தானியங்களான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ் வியாபார நிறுவனத்தின் பங்குதாரர்களாக திருமதி விஜயபரணி ஜெயசுதன், திருமதி சுஜிக்கா ஜனகன் ஆகியோர் உள்ளனர்.
தற்போதைய கால கட்டத்தில் தொற்றாத வியாதிகளான சக்கரை வியாதி, மார்படைப்பு, புற்றுநோய் போன்றவைகளே தற்போது அதிக அளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளன.
எமது முன்னோர்கள் 100-வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்ததன் காரணம் அவர்களின் பாரம்பரிய உணவு முறைகளே.
கைவிடப்பட்ட, மறக்கப்பட்ட மரபு உணவு வகைகளை ஆணிவேர் நிறுவனம் மீண்டும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஒரு விழிப்புணர்வு நோக்கத்தோடு இந்த விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளனர்.
மரபு ரீதியான பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுமாறு ஆணி வேர் நிறுவனம் வேண்டுகோள் விடுக்கிறது.