பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 14 பேரையும் பிணையில் விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலா 15 ஆயிரம் ரொக்கப் பிணையிலும், 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சமோத் சத்சர ஒவ்வொரு மாதமும் கொழும்பில் உள்ள குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஏனைய மாணவர்களுக்கும்
நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதோடு, அவற்றை மீறினால் பிணை
இரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.