எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தன்று தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

 


 

 கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை வாழ் பெற்றோர்கள்,சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர்  தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் தெரிவித்தார்.