ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 14 ஆவது நினைவு தினம்

 

 


















 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 14 ஆவது  நினைவு தினம் இன்று (13) காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமரர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் உருவப் படத்திற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்களான கதிரேசபிள்ளை கிருபாகரன் மற்றும் விஸ்வநாதன் பத்மஸ்ரீ ஆகியோர் ஒன்றிணைந்து மலர்மாலை அணிவித்தனர். அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட  ஊடகவியலாளர்களால் அகல் விளக்கேற்றப்பட்டு, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு   மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவர் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்   போது செல் தாக்குதலுக்குள்ளாகி அகால மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
க.கிருபாகரன்
கல்லடி செய்தியாளர்